பிரபுதேவா

மாஸ்டர் பிரபுதேவா ரப்பர் ஆல் ஆனவரா அல்லது எலும்பும், நரம்பும், சதையால் ஆனவரா என்ற டவுட் அனைவருக்குமே எழும் ஒன்று தான். அன்று சிக்கு புக்கு ரயிலில் ஆடி கலக்கியவர் இன்று குலேபா பாடல் வரை நம்மை அசத்தி வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் இவர் நம் கோலிவுட் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் என்று பல ஹீரோக்களுக்கு டான்சிங்கில் ரோல் மாடல் இவர் தான்.

சாந்தனு பாக்கியராஜ்

நம் பாக்கியராஜின் ஜூனியர். நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என அனைத்தும் கற்றுக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற இன்றளவும் கடின முயற்சி எடுத்து வருபவர்.

Tamil Cinema Celebrity
மாத்ரும்பூமி லைவ்

இந்நிலையில் நம் சினிமா செலிபிரிட்க்கள் பலர் ஷார்ஜாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளனர். பிரபுதேவா, சாந்தனு, நிக்கி கல்ராணி, ப்ரணிதா, சாய் தன்ஷிகா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ஹரி உள்ளிட்ட பலர்.

இந்நிகழ்ச்சிக்காக பிரபுதேவா மற்றும் சாந்தனு ரெஹெர்சல் பார்த்த டான்ஸ் வீடியோ தான் வைரலாகியுள்ளது. சாந்தனு தன் ட்விட்டரில் “8 வயதில் இவரின் நடனத்தை பார்த்து ஆடும் ஆசை வந்தது. இன்று 23 வருடம் கழித்து அவருடன் ஆடும் வாய்ப்பு அமைந்துள்ளது. என் கனவை நிறைவேற்றிய மாஸ்டருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here