வில்லனாக நடித்து 7 விருதுகளை தட்டி சென்ற பிரகாஷ்ராஜ்.. மொத்த படங்களின் லிஸ்ட்.!

இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து சிறந்த நடிப்புக்கான பல விருதுகளை வென்றவர் தான் பிரகாஷ்ராஜ். பெங்களூரில் பிறந்த பிரகாஷ்ராஜ் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.

இயக்குனர் கே பாலச்சந்தர் டூயட் படத்தின் மூலம் பிரகாஷ்ராஜை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நேர்மறை, எதிர்மறை, கௌரவ தோற்றம் என பல்வேறு வகையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

பிரகாஷ்ராஜ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பழமொழிகளில் தன் பன்முக திறனை வெளிப்படுத்தி உள்ளார். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு வன்முறைக்கு எதிராக துணிச்சலோடு செயல்பட்டு வருகிறார். பிரகாஷ்ராஜ் வில்லனாக பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கான விருதுகளையும் வாங்கியுள்ளார்.

prakash-raj-cinemapettai-0
prakash-raj-cinemapettai-0

கல்கி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு கல்கி வெளிவந்தது. இப்படத்தில் வில்லனாக நடித்ததற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு வாங்கினார்.

வானவில்: குரு பிளிம்ஸ் தயாரிப்பில் 2000இல் மனோஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரகாஷ்ராஜ் நடித்த படம் வானவில். இப்படத்தில் அர்ஜூனின் தோழனாக நடித்த பின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இந்தப் படத்திற்காக சிறந்த வில்லனுக்குகான தமிழ் ஸ்டேட் பிலிம் அவார்ட் வாங்கினார்.

கில்லி: கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பு பலராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தில் முத்துப்பாண்டி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்காக 2004 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் பிலிம்பேர் அவார்ட் வாங்கினார்.

சிவகாசி: சிவகாசி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் உடையப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு தம்பியாக விஜய் முத்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். உடையப்பா கதாபாத்திரத்தில் அம்மா,தங்கையை கொடுமை படுத்தியும் மாமியாருக்கு அடங்கிப் போகும் சுபாவம் கொண்டவராக நடித்திருக்கிறார். சிவகாசி படத்திற்காக பிலிம்பேர் மற்றும் விஜய் அவார்ட்ஸ் பெற்றுள்ளார்.

வில்லு, போக்கிரி: வில்லு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து 2007 ஆம் ஆண்டு போக்கிரி படத்தில் சிறந்த வில்லனாக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் வாங்கினார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து போக்கிரி படத்திற்காக 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டு வாங்கினார்.

சிங்கம்: சிங்கம் படத்தில் போலீஸ் அதிகாரியாக உள்ள சூர்யாவுக்கு வலுவான வில்லனாக நடித்து இருப்பார் பிரகாஷ்ராஜ். இப்படத்திற்காக
அப்ஸரா பிலிம் அன்ட் டெலிவிஷன் புரொடியூசர் கைட் அவார்ட்ஸ், ஃபிலிம் ஃபேர் அவார்ட் சவுத், இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகடமி அவார்டு என விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்