ரியல் ஹீரோவான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பற்றி ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். ஆர்.கே.சுரேஷ், உபாசனா, அம்பிகா லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி,அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சேத்தன், மோகன் ராம் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். சினிமா நடிகராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். விஜய் விக்ரம் இயக்குகிறார்.

விஜய் விக்ரம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பாலு முரளி இசை, குகன்.எஸ்.பழனி ஒளிப்பதிவு. பிரபாகர் படத்தொகுப்பு. ஈரோடு மோகன் என்பவர் தயாரிப்பளார்.

prakash raj

தற்பொழுது , இப்படத்தில் போலீஸ் கமிஷனராக பிரகாஷ் ராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகின. இது பற்றி பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்  “வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையம்மாக கொண்டு  எடுக்கப்படும் இப்படத்தில் நான் நடிப்பதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சில காலமாகவே தமிழில் சினிமாவில் நடிப்பதை வெகுவாக  குறைத்துக்கொண்ட பிரகாஷ் ராஜ். நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார் .