Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-66-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தளபதி பட வில்லன் நடிகர்.. ட்விட்டரில் உருக்கமான பதிவு.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர். இவரது யதார்த்தமான நடிப்பே இவர் நடிக்கும் படங்களுக்கு சிறப்பு அம்சமாக அமைகிறது. கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் தற்போதுவரை பிரபலமாக உள்ளது. வில்லத்தனத்தை மிகவும் இயல்பாக நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது பிரகாஷ்ராஜ் தான்.

பிரகாஷ்ராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல அதைத் தவிர இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

prakash-raj

prakash-raj

தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் கோவளத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் சறுக்கி விழுந்த பிரகாஷ்ராஜ்க்கு இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள பிரகாஷ்ராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறிய விபத்து, லேசான எலும்பு முறிவு தான். பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். இது எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் பிரகாஷ்ராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Continue Reading
To Top