கர்நாடகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் இயக்குனர் கே.பாலசந்தரால் அறிமுகமான பிரகாஷ்ராஜ், தமிழில் தான் அதிக ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காவிரி பிரச்சனையால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் அசாதாரண நிலை இருப்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கர்நாடக மக்கள் கோபம் தனக்கு புரிந்தாலும் அந்த கோபத்தை வெளிப்படுத்திய விதம் தவறு என்று கூறிய பிரகாஷ் எதையும் சட்டரீதியில்தான் அணுக வேண்டும் என்று கர்நாடக மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

வன்முறை மூலம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முயல்வது அநீதியானது. இதுதான் நாம் நம் குழந்தைகளுக்கு காட்டும் நல்வழியா? என்று கேள்வி கேட்டுள்ள பிரகாஷ்ராஜ், முதலில் நாம் மனிதர்களாக, மனிதத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்வோம். பஸ்ஸை கொளுத்துவது, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவற்றை கைவிட்டு சட்டப்போராட்டத்தில் இறங்க வேண்டும். இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.,