தமிழ் சினிமாவின் இளம் நடிகர் அசோக் செல்வனும் சூப்பர் சிங்கர் பிரகதியும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவி இருக்கிறது.

விஸ்காம் படித்த அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர். பல பட வாய்ப்புகளை தேடியும் இவருக்கு கிடைத்தது தோல்வியே. இனிது இனிது பட ஆடிஷனில் கலந்து தோல்வி அடைந்தார். 7ஆம் அறிவு படத்தில் இவர் நடித்த சில காட்சிகளில் இறுதி கட்ட வடிவத்தில் கட் செய்யப்பட்டு விட்டது. அப்படத்தை தொடர்ந்து, சூது கவ்வும் படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, நாயகனாக பீட்சா இரண்டாம் பாகத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புதுமுக இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படம் அசோக்கிற்கு நல்ல வரவேற்பாக அமைந்தது. இதையடுத்து, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில், அசோக் செல்வனுக்கும், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் பிரகதி குருபிரசாத்திற்கும் காதல் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இருவரின் பல செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. மேலும், இரு வீட்டார் சம்மதத்தை வாங்கிவிட்ட இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் குறித்த எந்த வித விளக்கத்தையும் இருவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகதி குருபிரசாத் சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டவர். மூன்றாவது சீசனில் ரன்னர் அப் அடித்த பிரகதிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏராளமாக வந்து கொண்டு இருக்கிறது. பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் இரு பாடல்களை பாடியுள்ளார். இவரும் கோலிவுட்டில் நடிகையாக விரைவில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.