சின்னத்திரை நடிகர் பிரதீப்  தற்கொலை செய்து கொண்டதாக இரண்டு நாட்களுக்கு முன் செய்திகள் வந்ததை மறந்திருக்க மாட்டோம்.

தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் நடித்து வந்தார்  நடிகர் பிரதீப்.

இவர் ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில்  தற்கொலை செய்து கொண்டார் இது சின்னத்திரை வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடன் தொல்லை அதிகம் என்றும் அதன்  காரணமாக அவர் தற்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும்தான் முதலில் சொல்லப் பட்டது.

ஆனால்,  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் பிரதீப்பின்   தலை மார்பு  உடம்பெங்கும்  ரத்தகாயங்கள் இருப்பதாக கூறுகிறது.

பிரதீப்பின் அறையில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததாகவும், கண்ணாடிகளும் உடைந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம்   போலீசாருக்கு வந்தது. அவரது மனைவி மீதும் சந்தேகம் வந்துள்ளது என்கிறார்கள்.

இதையடுத்து அவரது மனைவி மற்றும் பிரதீபின் நண்பர்களிடமும் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளது காவல்துறை.