ட்ரெண்டுக்கு ஏற்றபடி ஹிட் கொடுக்கும் பிரதீப்.. லவ்வர் பாய்க்கு போட்டியாக இருக்கும் 4 ஹேண்ட்சம் ஹீரோக்கள்

Trending Heroes: கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி லவ் டுடே படத்தில் லவ்வர் பாயாக நடித்து ட்ரெண்டிங் ஹீரோவாக மாறிய பிரதீப் சமீபத்தில் கொடுத்த டிராகன் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிட்டார். எதார்த்தமான நடிப்பின் மக்களை கவர்ந்ததால் தொடர்ந்து பிரதிப்புக்கு சுக்கிர திசை அடிக்கும் விதமாக நடித்த இரண்டு படமும் ஹிட் ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து விக்கி இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படமும் பிரதிப்புக்கு ஹிட் ஆகி துவண்டு போய் இருக்கும் விக்கிக்கும் நல்ல பிளாட்பார்ம் கிடைக்கப் போகிறது. அந்த வகையில் இவரை மாதிரி ட்ரெண்டிங் ஹீரோவாக தற்போது நான்கு ஹீரோக்கள் வெற்றி நடை போட்டு வருகிறார்கள். இதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த அனைத்து படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

இவர்களை தொடர்ந்து குட் நைட் மணிகண்டன் மற்றும் அசோக் செல்வனின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்ததால் இவர்களுடைய படமும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் பிரதீப்புக்கு டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் வெற்றி பெறப்போகிறது. கவினுக்கு பிளடிபக்கர் படத்தை தொடர்ந்து கிஸ், மாஸ்க் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அடுத்ததாக மணிகண்டனுக்கு குட் நைட், லவ்வர் மற்றும் சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் படமும் ஹிட் ஆகிவிட்டது. இனி ட்ரெண்டிங்க்கு ஏத்த மாதிரி கதையை சூஸ் பண்ணி அடுத்த வெற்றியை கொடுப்பதற்கு தயாராகி விட்டார். இதே மாதிரி அசோக் செல்வனும் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வழக்கம் போல் அசோக்செல்வன் அவருடைய நடிப்பில் குறை சொல்லாதபடி ஈசியாக ஸ்கோர் பண்ணி விடுவார். இப்படி ட்ரெண்டிங் ஹீரோ இடத்தில் இந்த ஐந்து ஹீரோக்களும் போட்டி போட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல என்பதற்கு ஏற்ற மாதிரி ஹிட் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement Amazon Prime Banner