வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2025

இவங்க தான் பா நம்ம பிரதீப் ஆண்டனியின் காதலி.. வைரலாகும் ஃபோட்டோ

Pradeep Antony girl friend: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் போட்டியில் கடைசி வரையும் இருந்து டைட்டில் கார்டு வாங்கி இருந்தால் கூட இந்த அளவுக்கு மக்களிடையே புகழ்பெற்று இருப்பாரா என தெரியவில்லை. பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதிலிருந்து அவருடைய லெவல் வேற மாதிரி ஆகிவிட்டது.

பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா, விசித்திரா, தினேஷ் ஆகியவர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்திருந்தார்கள். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்கள் நிறைய பேர் கமல் செய்தது தவறு என குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

தாத்தா டாக்ஸ் என்னும் பெயரில் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் பிரதீப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார். அதில் சில தினங்களுக்கு முன்பு மாயா மற்றும் பூர்ணிமாவை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுரேஷ் வீட்டில் அவருடன் பிரதீப் சாப்பிட்டுக் கொண்டே அந்த லைவில் தன்னுடைய முகத்தை காட்டியது நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read:6 படம் நடித்தும் பிக் பாஸ் மாயாவுக்கு கெஸ்ட் ரோல் தான்.. குடிமிபிடி சண்டை போட்டும் வேஸ்ட் பீஸ்

அப்போது பிரதீப் ஏதோ பேச முயற்சி செய்ய, அதற்கு சுரேஷ் சக்கரவர்த்தி நீ பேசவே கூடாது, பிக் பாஸ் வீட்டில் செய்த உப்புமாவை கொண்டு வந்து அவன் வாயை மூடி இருக்கிறேன் என்று நக்கலாக சொன்னார். அதே நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்து அறிமுகம் செய்து, இவருக்குத்தான் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

மேலும், இத்தனை வருடங்களாக பிரதீப்பை தாங்கி வருகிறார். அவருடைய கேர்ள் பிரண்டு தான் இவர் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த பெண் யார், அவருடைய பெயர் என்ன என்று எந்த தகவலையும் சுரேஷ் சொல்லவில்லை. பிரதீப்பிற்கு வெளியில் இருக்கும் காதலி இவர்தான் என்பது மட்டும் தற்போது உறுதியாக இருக்கிறது.

பிரதீப் ஆண்டனியின் கேர்ள் பிரண்டு

Pradeep antony gf
Pradeep antony gf

பிரதீப் ரெட் கார்ட் வாங்கி வெளியில் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்திலும் இந்த பெண் இருந்தார். அவருக்கு காதலிஇருப்பது உறுதியாக ஆனதிலிருந்து அவருடைய ரசிகர்கள் அந்தப் பெண் யார் என வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் பிரதீப் தன்னுடைய ரசிகர்களுக்கு அவரின் காதலியை அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:விக்ரம் இல்லன்னா விஷ்ணு.. குள்ளநரி தந்திரத்தை காட்டும் பூர்ணிமா

Trending News