Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெரிய பட இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. பகிரங்கமாக தெரிவித்த 32 வயது நடிகை

சினிமா நடிகைகள் பலரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் தங்களை படுக்கைக்கு அழைத்த விஷயங்களை ஆரம்பத்தில் சொல்லாமல் தாங்கள் ஒரு இடத்திற்கு வந்த பிறகு கூறுவது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.

இன்னமும் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சில நடிகைகள் அதை ஏற்றுக்கொண்டு பட வாய்ப்புகள் பெற்று முன்னேறி வருகின்றன.

ஒரு சிலரோ திறமையின் அடிப்படையில் தான் வரவேண்டும் எனக்கூறி நிராகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி நடிகைகள் தங்களை பல இயக்குனர்கள் படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிராச்சி தேசாய் என்பவர் ஒரு பெரிய படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது படம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்போது இயக்குனர் தனியாக வரச்சொன்னாராம்.

இன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்டால் கண்டிப்பாக இந்த பெரிய பட வாய்ப்பை தருவதாகவும், இதன் மூலம் வருங்காலங்களில் பெயர் புகழ் அடைந்து விடலாம் எனவும் ஆசை காட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே பெரிய நடிகையாக வர ஆசைப்படுகிறேன் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இதனை ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்பதால் தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைத்த பிறகு கூறுகிறார் இந்த நடிகை.

prachi-desai-cinemapettai

prachi-desai-cinemapettai

Continue Reading
To Top