Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முறுக்கேறிய உடம்பு, கையில் கத்தியுடன் வெளியானது பிரபுதேவாவின் “தேள்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

பிரபுதேவா

அன்று சிக்கு புக்கு ரயிலில் ஆடி கலக்கியவர் இன்று குலேபா பாடல் வரை நம்மை அசத்தி வருகிறார். சமீபகாலத்தில் இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவை விட நடிகர் தான் செம்ம பிஸி. ‘லஷ்மி’, ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘தேள்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

தேள்

‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரிகுமார். பிரபல நடன இயக்குநரான இவர் பிரபுதேவாவை நாயகனாக வைத்து இயக்கும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நாயகியாக சம்யுக்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு மற்றும் ஈஸ்வரி ராவும் நடிக்கவுள்ளார்.

prabhudeva-thel

prabhudeva-thel

சி சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக செந்தில் ராகவனும் சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணிபுரிகின்றனர். பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.

தீபாவளி வாழ்த்துக்களுடன் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top