Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பட தலைப்பில் பிரபுதேவா. வைரலாகுது பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on
ஊமை விழிகள் – 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் எழுதி, தயாரித்து ஆர்.அரவிந்தராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்திக், அருண்பாண்டியன் சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான தரமான திரில்லர் படம்.
இந்த தலைப்பை தான் இப்படக்குழு தனதாக்கியுள்ளது. விஎஸ் எழுதி இயக்குகிறார். தனஞ்செயன், மாபிள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். காஸிப் இசை, விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பென்னி ஒலிவர்.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் நேற்று வெளியிட்டார். ஹீரோயின் மம்தா மோகன்தாஸ் கண்ணில் பிரபுதேவா உள்ளது போன்ற இந்த போஸ்டர் நல்ல ரீச் ஆகியுள்ளது.

Prabhudeva in Oomai Vizhikal
