பிரபுதேவாவுக்கு இந்த படத்தை ஹாலிவுட்டில் இயக்க ஆசையாம்

பிரபுதேவா ஏ.எல். விஜய் இயக்கத்தில் தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க, டீஸரும் அண்மையில் வெளியாகி இருந்தது.

இப்படத்தை பற்றி பிரபுதேவா பேசும்போது, ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் படம் இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. பல சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்தது இப்படம் என்றார்.

அதோடு தனக்கு ஒரு டிரீம் இருக்கிறது என்றும், அது நமது மகாபாரதத்தை புகழ் பெற்ற ஹாலிவுட் சினிமாவான லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படத்திற்கு இணையாக எடுப்பது தான் என்கிறார் பிரபுதேவா.

Comments

comments

More Cinema News: