Connect with us
Cinemapettai

Cinemapettai

poikkal-kuthirai-movie-review

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை இல்லாத புது அவதாரத்தில் பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை.. தேறுமா.? தேறாதா.? விமர்சனம்

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் தனது ரூட்டை மாற்றி எடுத்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் தான் பொய்க்கால் குதிரை. இமான் இசை அமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவு, ப்ரீத்தி மோகன் எடிட்டிங்.

கதை–  விபத்தில் தனது ஒரு கால் மற்றும் மனைவியை இழக்கிறார் பிரபுதேவா. மகள் தான் அவரின் உலகம் என்றாகிறது. வந்த இன்சூரன்ஸ் பணத்தில் மகள் சொல்ல தனக்கு செயற்கை கால் வாங்கி பொறுத்துகிறார்.

மகளுக்கு இருதய பிரச்சனை என தெரிய வர, அதனை சரி செய்ய 70 லட்சம் தேவை படுகிறது. ஜெயிலில் உள்ள பிரகாஷ்ராஜை சந்திக்கிறார், அவரோ வரலக்ஷ்மி சரத்குமார் மகளை கடத்த சொல்லி ஐடியா தருகிறார்.

முதலில் மறுத்த பிரபுதேவா பின்னர் ஜெகனுடன் கூட்டணி போடுகிறார், எனினும் அவருக்கு முன் வேறு யாரோ பெண்ணை கடத்துகின்றனர். இந்நிலையில் பிரபுதேவா சிக்குகிறார். நானே உங்கள் மகளை மீட்டு தருகிறேன் மாறாக எனது மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தாருங்கள் என கோரிக்கை வைக்கிறார் பிரபுதேவா. பின்னர் இன்வெஸ்டிகேஷன், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என சென்று முடிகிறது இந்த படம்.

சினிமாபேட்டை அலசல்– நல்ல கதை மட்டுமன்றி திரைக்கதை அமைப்பும் சூப்பர் தான். முதல் பாதி சற்றே நம் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி சூப்பர். பாடல்கள் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. சண்டைக்காட்சிகள் சூப்பர், எமோஷன் சீன்கள் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நாம் எளிதில் யூகிக்க கூடிய ட்விஸ்டுகள் தான் வருகிறது. அடுத்த பாகம் எடுப்பதற்கு ஏற்றது போன்று பல விஷயங்களை வைத்துள்ளார் இயக்குனர்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– ஓடிடி தளத்திற்காக எடுக்கும் வெப் தொடருக்கு தேவையான அத்தனை சமாச்சாரமும் இப்படத்தில் உள்ளது. திரைப்படம் என எடுத்ததை விட வெப் சீரிஸாக எடுத்திருக்கலாம் இந்த டீம் என்பதே நம் கருத்து.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.5/5

Continue Reading
To Top