Connect with us

Cinemapettai

முதல் முறையாக பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் திருமணமான நடிகை.. கல்யாணத்திற்கு பிறகும் கொட்டும் வாய்ப்புகள்!

prabhudeva-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் திருமணமான நடிகை.. கல்யாணத்திற்கு பிறகும் கொட்டும் வாய்ப்புகள்!

பிரபுதேவா நடிக்க இருக்கும் புதிய பேய் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக சமீபத்தில் திருமணமான நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளாராம். ஒருமுறை பிரபுதேவாவுடன் ஜோடி போடும் நடிகைகளை நினைத்து கோலிவுட் வட்டாரம் பதறுகிறதாம்.

ஒரு வெற்றி படம் கூட கொடுக்காமல் எப்படி பிரபுதேவாவுக்கு தொடர்ந்து இத்தனை பட வாய்ப்புகள் குவிகிறது என்பதே கோலிவுட் நடிகர்கள் மத்தியில் புரியாத புதிராக இருக்கிறது.

பிரபுதேவாவின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சுலபமாக டப் செய்து வெளியிட்டு காசு பார்க்கலாமாம். அதுமட்டுமில்லாமல் டிவி சேட்டிலைட் ரைட்ஸ் விற்றும் நல்ல கல்லா கட்டுகிறார்களாம்.

இதனாலேயே பிரபுதேவாவுக்கு தொடர்ந்து பல படங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாமிருக்க பயமேன், காட்டேரி போன்ற படங்களை இயக்கிய டிகே இயக்கத்தில் ஒரு திகில் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளாராம் காஜல் அகர்வால்.

kajal-agerwal-cinemapettai

kajal-agerwal-cinemapettai

இதனைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், இப்போ தான் அந்தப் புள்ளைக்கு கல்யாணம் ஆகியிருக்கு, அதுக்குள்ள பிரபுதேவாவுடன் ஜோடியா! என பதறிப்போய் இருக்கிறார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top