Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhudeva-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மதுரை சம்பவம் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’

‘தூத்துக்குடி’, ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஹரிகுமார். பிரபல நடன இயக்குநரான இவர் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சி சத்யா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக செந்தில் ராகவனும் சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணிபுரிகின்றனர்.

பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இருவரும் இணைந்து வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.

prabhudeva-thel

prabhudeva-thel

படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறுகையில், “ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர் ஒரு படத்தில் இயக்குவது வெறும் யதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எமோஷன் கலந்த ஒரு ஆக்‌ஷன் படத்தைக் கொடுக்க இருக்கிறார்கள். ‘தேள்’ நிச்சயமாக எங்கள் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும்” என்றார்.

கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top