Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhu-nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்தமில்லாமல் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா.. கிளி பறந்து விடுமோ என்ற கவலையில் விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவனுக்கு சமீபகாலமாக நயன்தாராவை காதலிப்பதை விட அவருடன் நயன்தாராவின் முன்னாள் காதலர்கள் யாரும் ஜோடி சேர கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

ஆனால் தற்போது சம்பாதிக்கும் நோக்கத்தில் இருக்கும் நயன்தாரா யார் ஹீரோ என்பதையெல்லாம் பார்க்காமல் கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயாராக உள்ளாராம்.

அந்த வகையில் சிம்புவுடன் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இது நம்ம ஆளு எனும் படத்தில் நடித்திருப்பார். அப்போது மீண்டும் சிம்பு மற்றும் நயன்தாரா இடையே காதல் வந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இதனால் விக்னேஷ் சிவன் மீண்டும் சிம்புவுடன் நடிக்க வேண்டாம் என நயன்தாராவுக்கு கட்டளையிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் நயன்தாரா அதையெல்லாம் மதிக்காமல் தற்போது இன்னொரு காதலரான பிரபுதேவாவுடன் புது படத்தில் ஜோடி போட்டுள்ளார்.

பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவரும் மிகத் தீவிரமாக காதலித்ததும், பிரபுதேவாவுக்காக நயன்தாரா மதம் மாறி, பச்சை குத்தி, என்னென்னமோ செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்படி உருகி உருகி பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் விக்னேஷ் சிவன் தற்போது மிகுந்த கவலையில் உள்ளாராம்.

அதை இதைக் காட்டி நயன்தாராவை மயக்கி கூட்டி சென்று விட்டால் என்ன செய்வது என கண்கொத்தி பாம்பாக நயன்தாராவை பாதுகாத்து வருகிறாராம்.

Continue Reading
To Top