கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இயக்குனர் விவி விநாயக் இயக்கி வரும் இப்படத்திற்கு கத்திலாண்டோடு என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  பிரபுதேவா பாராட்ட, கண்ணீர் மழையில் தமன்னா

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலன்று திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடனப்புயல் பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் தலா ஒரு பாடலுக்கு நடனம் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருமே ஆந்திராவிலும் கொடிகட்டி பறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.