Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhudeva-cinemapettai

Videos | வீடியோக்கள்

பெண்களை கதற கதற வேட்டையாடும் சைக்கோவாக பிரபுதேவா.. கவர்ச்சி பொங்க மிரட்டும் பஹீரா டீசர்

நடன இயக்குனராக இருந்து ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா ஹிந்தியில் இயக்குனராகவும் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் பிரபுதேவா இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே தென்னிந்திய மொழிகளிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களாகத் தான் இருந்தன. இருந்தாலும் இன்று இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நீண்ட வருடங்களுக்கு பிறகு தேவி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பிரபுதேவா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக பஹீரா என்ற படம் வெளியாக உள்ளது.

சைக்கோ த்ரில்லராக உருவாகி இருக்கும் பஹீரா படத்தின் டீசரில் பிரபுதேவா வித்தியாசமாக நடித்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் பெண்களை துடிக்கத் துடிக்க வேட்டையாடும் கொடூரமான வேடத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் கவர்ச்சியும் கொஞ்சம் தூக்கலாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பிரபு தேவாவின் பஹீரா டீசரை ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top