Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar-kadhalan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கரின் காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ ஹீரோயின் வேறயாம்.. அந்தக் கூட்டணி நல்லாருக்குப்பா!

ஜெண்டில்மேன் என்ற பெரிய வெற்றிப் படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளிவந்த திரைப்படம் காதலன். 1994 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றது.

பிரபுதேவா, நக்மா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகிய படம் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டது. ஆனால் காதலன் படம் வெளியாகி முதல் வாரம் வரை இந்த படத்திற்கான வரவேற்பு சுத்தமாக இல்லையாம்.

அதன்பிறகுதான் அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாக அந்த படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிந்த வசந்தபாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அப்போதுதான் காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் பிரபு தேவா மற்றும் நக்மா இல்லை என்பதை தெரிவித்திருந்தார். முதலில் பேசப்பட்டவர் நடிகர் பிரசாந்த்.

காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்த் நடித்தால் இன்னும் படம் வேற லெவல் ஹிட்டாகும் என நினைத்து அவரை முதலில் கமிட் செய்ய நினைத்தார்களாம். ஆனால் சங்கர் தான் அடம்பிடித்து பிரபுதேவாவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தாராம்.

prasanth-cinemapettai

prasanth-cinemapettai

அதேபோல் நாயகியும் முதலில் நக்மா இல்லையாம். மாதுரி தீக்ஷித் என்ற நடிகைதான் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தாராம். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் நக்மா நடித்ததால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

madhuri-dixit-cinemapettai

madhuri-dixit-cinemapettai

பிரசாந்த் மாதுரி தீக்ஷித் கூட்டணி கூட இந்த படத்தில் சிறப்பாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். அன்றைய காலகட்டங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இவர்கள் இருவருக்கும் உண்டு.

Continue Reading
To Top