Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini salman khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியா? சல்மான் கானா? ஒப்பிட்டு பேசிய பிரபுதேவா

நடிப்பில் ஒரு காலத்தில் புயலை கிளப்பிய பிரபுதேவா கொஞ்ச வருடம் முன்னாடி இயக்குனராகி பட்டய கிளப்பினார். சில படங்கள் சுமாராக போனாலும் நல்ல மார்க்கெட்டிங் பண்ணி நல்ல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் குடுத்தார். இப்ப மறுபடியும் படங்களில் நடிக்க வந்துள்ளார் அதுக்கு வாழ்த்துக்கள். டைரக்டர் மகேந்திரன் கூட விக்ரம்க்கு அடுத்து நல்ல நடிகர் பிரபுதேவா என்று ஒரு முறை பேட்டியில் கூறினார். நம்ம சினிமா பக்கமும் கொஞ்சம் வாங்க பிரபுதேவா.

அபிநவ் காஷ்யப் இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, அர்பாஸ் கான், சோனு சூத், டிம்பிள் கபடியா, மலைக்கா அரோரா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ ஓர் ஆக்‌ஷன் திரைப்படம். இப்படம் பெரிய ஹிட்டானதையடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தினை அர்பாஸ் கான் இயக்கி தயாரித்தார். ஆக்க்ஷனுடன் காமெடி கலந்து எடுக்கப்பட்ட இப்படமும் பெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில் அப்படத்தின் மூன்றாம் பாகத்தினை பிரபுதேவா இயக்கவுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “52 வயதான சல்மான் கானிடம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் உள்ள நற்பண்புகளை காண முடிகிறது. ரஜினியிடம் உள்ள ஸ்டைல் சல்மானிடமும் காணமுடிகிறது” என்று ஒப்பிட்டு பேசியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், சல்மான் கான், அர்பாஸ் கான், சோனாக்‌ஷி சின்ஹா என ’தபாங்’ கதாபாத்திரங்கள் இந்த பாகத்திலும் நடிப்பதாகவும், மற்ற இரண்டு பாகங்களை போலவே ‘தபாங் 3’ படமும் சூப்பர் ஹிட்டாகும் என பிரபுதேவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தையும் அர்பாஸ் கான் மற்றும் மலைக்கா அரோரா இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top