பிரபுதேவாவை தூக்கிவிட்ட 5 இயக்குனர்கள்.. நடனத்தில் இருந்து நடிகன் அந்தஸ்தைக் கொடுத்த படங்கள்

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என திரையுலகில் கொண்டாடப்படும் நடன இயக்குனர் பிரபுதேவா, அதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அப்படி இவர் நடனத்தில் இருந்து நடிகன் அந்தஸ்தைக் கொடுத்த 5 படங்கள் இன்றும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

காதலன்: குஞ்சுமோன் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில், ஷங்கர் இயக்கத்தில் நக்மாவிற்கு ஜோடியாக காதலன் படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடித்தது ஒட்டுமொத்த சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தப்படத்தின் பாடல்களும் பிரம்மாண்டமான காதல் கதையும் அட்டகாசமான பிரபுதேவாவின் நடனமும் அவரை ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக நிலைநிறுத்தியது. இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதோடு 4 தேசிய விருதுகளையும் அள்ளியது. இந்தப் படத்திற்குப் பிறகு பிரபுதேவாவின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

ராசையா: 1995 ஆம் ஆண்டு இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, ராதிகா, விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்காவிட்டாலும் நடிப்பில் மெருகேறி கொண்டு இருந்த பிரபுதேவாவின் நடனத்திற்காக திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாத படமாக இருந்தது.

மின்சார கனவு: இந்த படம் ராஜீவ் மேனன் இயக்கத்தில் முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். பிரபுதேவா, அரவிந்த்சாமி இரண்டு கதாநாயகன்கள் நடித்த இந்த படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருப்பார். தேவா கதாபாத்திரத்தில் பிரபுதேவா பிரமாதமாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் பிரபுதேவாவிற்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது உட்பட 4 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் மனதை தொட்டு: எஸ் எழில் இயக்கத்தில் பிரபுதேவா, சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் அண்ணன் சரத்குமார் ரவுடியாக இருந்தாலும், தம்பி பிரபுதேவாவை இருதய அறுவை சிகிச்சை நிபுணராக மருத்துவராக பார்க்க விரும்புகின்றனர்.

பிரபுதேவா- சுனிதா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ஒரு கட்டத்தில் சுனிதா தனக்காக உயிரைவிட்ட அக்காவின் குழந்தைக்கு இருதய நோய் ஏற்பட்டால் நிலையிலும், பிரபுதேவாவின் உதவியை நாடாமல் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். இதில் காதலியே வெறுத்து ஒதுக்கும் பாவப்பட்ட கதாபாத்திரத்தில் பிரபுதேவா சிறப்பாக நடித்திருப்பார்

காதலா காதலா: கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் சிறந்த நகைச்சுவை திரைப்படமாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் கமல்ஹாசனுடன் பிரபுதேவா சேர்ந்து அடிக்கும் லூட்டி திரையரங்கில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் இந்தப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஈடுகொடுத்து பிரபுதேவா நடித்ததன் மூலம் தன்னை ஒரு முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில் மின்னில் வேக நடனத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபுதேவாவை இந்த 5 படங்கள்தான் நடிகர் அந்தஸ்தைக் கொடுத்து சினிமாவில் தூக்கிவிட்டது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழில் கலக்கிய பிரபுதேவா, இந்தியில் சல்மான்கானுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -