சிவாஜி கணேசனை கிண்டல் செய்த பிரபல நடிகர்.. போன் பண்ணி டோஸ் விட்ட பிரபு

சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த நடிகர் நடிகைகளைப் போல் மிமிக்கிரி செய்கிறேன் என அவர்களை அநியாயத்திற்கு கேவலப்படுத்தி விடுகின்றனர். அதேபோல் படங்களிலும் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற கெட்டப் போட்டுக் கொண்டு அவர்கள் நடிகைகளுடன் கூத்தடிப்பது போன்ற காட்சிகள் வைத்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் திலகம் என அனைவராலும் கொண்டாடப்படும் சிவாஜி கணேசனை படாதபாடுபடுத்தியது இந்த மீடியா. எங்கு திரும்பினாலும் சிவாஜி போன்ற நடை, உடை, பாவனை அதுமட்டுமில்லாமல் அவரைப்போன்ற மிமிக்ரி என ஒரே கூத்துதான்.

அதுவும் சிவாஜியின் பெயரை வைத்து ஓரளவுக்கு கிண்டல் செய்தால் பரவாயில்லை. அநியாயத்திற்கு செய்தால் யார்தான் சும்மா இருப்பார்கள். குரு என் ஆளு என்ற மாதவன் படத்தில் சிவாஜி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் எம்எஸ் பாஸ்கர்.

எம்எஸ் பாஸ்கர் மற்றும் விவேக் கூட்டணி சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றது. விவேக் பெண் கெட்டப்பில் அசத்தும் காட்சிகளெல்லாம் அற்புதம். சிரிக்கத் தெரியாதவர்கள் கூட சிரித்து விடுவார்கள்.

அதில் சிவாஜியை கொஞ்சம் கேவலப்படுத்துவதாக பிரபுவுக்கு மனக்கஷ்டம் இருந்ததாம். இதை பார்த்துவிட்டு உடனடியாக எம்எஸ் பாஸ்கருக்கு போன் செய்து, என்னய்யா அப்பாவ கிண்டல் செய்கிறாயா? எனக் கேட்டாராம் பிரபு.

அதற்கு எம்எஸ் பாஸ்கர், அந்த கேரக்டரில் நான் நடிக்கவில்லை என்று சொன்னால் வேறு ஒருவர் நடித்திருப்பார். அப்பாவின் பெயரை கெடுக்கும் படி ஓவராக நடித்திருப்பார்கள். அதுதான் கிண்டல் செய்வதே தவிர நான் அவரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் இந்த காட்சியில் நடிக்கவில்லை என ஓபன் ஆக கூறிவிட்டாராம் எம்எஸ் பாஸ்கர்.

ms-baskar-vivek-cinemapettai
ms-baskar-vivek-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்