பிரபுவின் அண்ணன் மகன் சிவக்குமார், சுஜா வருணியுடனான தனது காதலை முதல்முறையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

suja varuni

குடும்பத்திற்காக 14 வயதில் சினிமாவில் நுழைந்த சுஜா வருணிக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. இதனால், படங்களில் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடி வந்தார். ஒரு கட்டத்தில் நல்ல நடிக்கிறாய் என ரஜினியின் பாராட்டை கேட்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறு சிறு வேடங்களை செய்து வருவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் இப்படமும் அவருக்கு சரியான வரவேற்பை பெற்று தரவில்லை. முன்னதாக, கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

suja varuni

ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கிய ஓவியா போல இவர் சிலவற்றை செய்வதால் அவரை காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இருந்தும் இரும்பு பெண்மணியாக இவர் செய்த பல டாஸ்குகள் மக்களை அதிகம் கவர்ந்தது. நிகழ்ச்சியில் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் பெயர் சிவக்குமார் எனவும் சுஜா தெரிவித்து இருந்தார். தன் திருமணத்தை கமல்ஹாசன் நடத்து வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

சமீபத்தில், தன் காதலர் புகைப்படத்தை சுஜா தனது இன்ஸ்டா மூலம் வெளியிட்டு இருந்தார். பலருக்கு அது ஆனந்த அதிர்ச்சியாகவே அமைந்தது. சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் சிவக்குமார் தான் சுஜா வருணியின் அத்தான். அவரும் சிங்கக்குட்டி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஏற்கனவே அறிமுகமான முகம் தான். இருவரும் சமீபத்தில் ஒரு கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அங்கு எடுத்த புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். அட கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ என ஒரு சேர அனைவரும் கிசுகிசுக்க தொடங்கினார். இதற்கு சுஜா வருணி, நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கொள்ளவில்லை. அப்படி நடக்கும் முன்னர் உங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்வேன். சிவக்குமார் என் நண்பர் தான் எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சிவக்குமார் தன் இன்ஸ்டாவில் சுஜாவுடனான தன் காதலை முதல்முறையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பதிவில், சுஜா வருணி ரசிகர்களுக்கும், என் ஊடக நண்பர்களுக்கும், பலரை கஷ்டப்படுத்தும் முன்னர் சில வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது என் கடமையாக இருக்கிறது. நான் கடந்த 11 வருடங்களாக இந்த அருமையான பெண்ணை காதலித்து வருகிறேன். என் பெயர் தான் சிவக்குமார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா சொன்ன அத்தான், நான் தான். அதனால், தயவுசெய்து தெரியாதவைகளை யுகித்து எழுதி எனக்கும், அவளுக்குமான உறவுகளை கஷ்டப்படுத்தி விடாதீர்கள். எங்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை உங்களுக்கு நானே தெரிவிக்கிறேன். அதுவரை இந்த விஷயத்தில் பொறுமை காக்கவும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.