Tamil Cinema News | சினிமா செய்திகள்
22 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் சிறைச்சாலை பட கூட்டணி !
சிறைச்சாலை
1996 இல் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் “காலாபானி”. இப்படத்தில் மோகன் லால் , பிரபு , தபு , அம்ரிஷ் பூரி, நெடுமுடி வேணு மற்றும் பலர் நடித்தனர். இப்படத்தினை தமிழில் சிறைச்சாலை என்ற பெயரில் வெளியிட்டனர். அந்தமான் தீவுகள், பிரம்மாண்ட சடைக்கட்சி என்று அன்றைய நாட்களில் ட்ரெண்ட் செட் செய்த படம்.

siraisaalai
மரக்கார் – அரபி கடலின்டே சிம்ஹம்
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால் தான் ஹீரோ. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கேரளாவில் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வீரரான குஞ்சாலி மரக்கார் பற்றிய சரித்திர படம் இது. இப்படத்தில் இந்த படத்தில் மோகன்லால் அவர்களுடன் பிரபு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட நடிகர்கள் மற்றும் ஹாலிவுட் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றதாம்.

prabhu mohanlal
அந்தோணி பெரும்பாவூர் , ராய் , சந்தோஷ் குறிவில்லா இப்படத்தை தயாரிக்கின்றனர்.
