ஐந்து ஹீரோயின்களை ஒரே படத்தில் வேட்டையாட காத்திருக்கும் பிரபுதேவா.. இயக்குனரும் ஒரு மாதிரியான ஆள்தான்

நடன இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி கண்டு தற்போது இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார் நடிகர் பிரபுதேவா. பாலிவுட் சினிமாவில் நெம்பர் ஒன் இயக்குனராக வலம் வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த பிரபுதேவாவுக்கு தேவி படம் ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்தார் பிரபுதேவா.

இருந்தும் அவரது படங்கள் எதுவுமே ரசிகர்களை கவர்ந்த பாடில்லை. இதனால் மீண்டும் இயக்குனர் பக்கமே திரும்பி விட்டார். ஒரு சில படங்கள் பைனான்ஸ் பிரச்சனையால் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே முடங்கி உள்ளது.

தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவரும் பிரபுதேவா ஒரு விவகாரமான இயக்குனருடன் கைகோர்க்கும் உள்ளதால் தமிழ் சினிமாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது கூட என்று சொல்லலாம்.

ஆம். தமிழ்சினிமாவில் திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற இரண்டு காவிய படங்களை எடுத்தவர் தான் அந்த ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது பிரபுதேவாவை வைத்து பஹீரா என்ற படத்தை இயக்க உள்ளார்.

baheera
baheera

திரில்லர் கதை அம்சத்துடன் வரும் இந்த படத்திற்கு பிரபுதேவாவுக்கு ஜோடியாக கிட்டத்தட்ட ஐந்து நாயகிகள் நடிக்க உள்ளார்களாம். இது தான் தற்போது கோலிவுட் சினிமாவுக்கே பிபி ஏற்றி உள்ளது. அதிலும் தனுஷுடன் நடித்த அமைரா தஸ்தூர், விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காயத்ரி போன்றோரும் மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்க உள்ளார்களாம்.

gayathrie-amaira
gayathrie-amaira

இவர்களிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடுபடப் போகிறார்களோ என கோலிவுட் வட்டாரங்களில் பதற்றம் தொற்றிக் கொண்டதாம்.

Leave a Comment