Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhudeva-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமா வரலாற்றில் புது அத்தியாத்தை தொடங்கும் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா தனது அடுத்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படும் பிரபுதேவா நடன இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் வெற்றி கொடி நாட்டி விட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். வாழ்க்கையில் சறுக்கல்களை சந்தித்தாலும், இன்னும் தன் திறமையால் பிரபலமாகவே இருந்து வருகிறார். பவித்ரன் இயக்கத்தில் இந்து படத்தில் 1994-ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியான காதலன் படம் பெரும் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து, நடிகராக நடிக்க பல வாய்ப்புகளும் வரத் தொடங்கின. தொடர்ந்து, நடிகராகவும் வெற்றி கண்டவர். விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து, பாலிவுட் பக்கம் சென்ற பிரபுதேவா, சல்மான் கானை வைத்து இயக்கிய ‘வாண்டட்’ படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். அடுத்து, அக்‌ஷய் குமாரை வைத்து இவர் இயக்கத்தில் வெளியான ‘ரவுடி ரத்தோர்’ சூப்பர் ஹிட் அடித்தது. இதன் மூலம், பாலிவுட்டில் வெற்றி இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். இவர் தயாரிப்பில் வெளியான ‘தேவி’ திரைப்படமும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ‘போகன்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான மெர்குரி படத்தின் மூலம் வில்லனாக தெறிக்கவிட்டார்.

இந்நிலையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏ.சி.முகில் இயக்க இருக்கிறார். இப்படத்தில் முதல்முறையாக பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top