Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதும் காதும் வச்ச மாதிரி இரண்டாம் திருமணத்தை முடித்த கொண்ட பிரபுதேவா.. கோலிவுட்டில் பரபரப்பு
சினிமா துறையில் நடன இயக்குனராகவும், முன்னணி கதாநாயகனாகவும் வலம் வந்துகொண்டிருந்த பிரபுதேவா, தற்போது முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஏற்கனவே பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டு, அது தோல்வியில் முடிந்தது என்பது நாம் அறிந்ததே. மேலும் அந்த காதல் திருமணம் வரை சென்று சில கருத்து வேறுபாட்டின் காரணமாக முறிந்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது பிரபுதேவாவிற்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு எந்த பதிலும், மறுப்பும் கூறாமல் பிரபுதேவா சைலெண்ட்டாக இருந்து வருகிறார்.
அதாவது தற்போது 47 வயதாகும் பிரபுதேவா, தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அவரது உறவுக்காரப் பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவியது.
இவ்வாறிருக்க பிரபுதேவாவுக்கு, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டருடன் திருமணம் முடிந்து விட்டதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் அண்மையில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை செய்து கொண்ட போதுதான் அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல்களுக்கு பிரபுதேவா எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பிரபுதேவாவின் இரண்டாவது திருமண சீக்ரெட் உண்மையா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பாகவே, இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

prabhu-deva-1
