டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பல்துறை வித்தகரான பிரபுதேவா தொடர்ந்து ‘குலேபகாவலி’, ‘மெர்க்குரி’ ஆகிய படங்கள் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார்.  

இதனையடுத்து ‘லஷ்மி’, ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், சல்மான் கானை வைத்து இந்தியில் ‘தபாங் 3’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், பிரபுதேவா தனது சிஷ்யர் ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் .

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக :male-police-officer:போலீஸாக நடிக்கவிருக்கிறார் பிரபுதேவா. இந்தப் படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் நேமிசந்த் ஜெபக் தயாரிக்க்கிறார். இப்படத்தின் இயக்குனர் ஏ.சி.முகில் ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் பிரபுதேவாவுடன் எழுத்தாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சில காலம் சர்ச்சையில் சிக்கி தற்பொழுது முழு கவனத்தையும் சினிமாவில் காட்டி வருகிறார், ஆனாலும் அவரை சுற்றி சர்ச்சைகள் வளம் வந்துகொண்டுதான் இருக்கிறது.