2 வருடங்களுக்கு பிறகு படத்தை OTTயில் வெளியிடும் பிரபுதேவா.. எனக்கு வேற வழி தெரியலங்க என புலம்பும் படக்குழு

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என கலக்கி வரும் பிரபுதேவா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முகில் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவேதா பெத்துராஜ் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். பிரபுதேவாவின் படத்திற்கு முதன் முறையாக இமான் இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகள் மேல் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனது படத்திற்குச் சூட்டி படப்பிடிப்பை துவங்கினார் பிரபுதேவா. ஆனால், படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னரும் இரண்டு வருடங்களாக வெளியாகாமல் உள்ளது.

கடந்த ஆண்டே படம் வெளியாகும் என சில அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தன. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் செயல்படாமல் உள்ளதாலும், நிதி நெருக்கடி காரணமாகவும் படம் வெளியாகாமல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

pon-manikavel-cinemapettai
pon-manikavel-cinemapettai

இந்நிலையில், ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பொன் மாணிக்கவேல் வெளியாகவிருக்கிறது என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வரும் என்று சொல்லப்படுகிறது.