Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டாம் பாகமாக உருவெடுக்கும் பிரபு தேவாவின் மெஹா ஹிட் திரைப்படம்.!
Published on
கடந்த 2016 ம் ஆண்டில் பிரபு தேவா நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தேவி, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.
தேவி திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்வதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது இந்த நிலையில் தற்பொழுது தேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து படபிடிப்பையும் தொடங்கி விட்டார்கள்.
நடிகர் பிரபு தேவா கோவை சரளாவுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தேவி-2 படத்திற்காக மொரீஷியஸ் நாட்டில் இருப்பதாக தனது சமூகவளைதலத்தில் பதிவிட்டுள்ளார் இதனால் தேவி -2 படம் உருவாகுவது உறுதியாகியுள்ளது.
