திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

டபுள் மீனிங் பாட்டு சர்ச்சை.. பிரபுதேவாவின் ஜாலியோ ஜிம்கானா எப்படி இருக்கு.? விமர்சனம்

Jolly O Gymkhana Movie Review: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யோகி பாபு என பலர் நடிப்பில் உருவான ஜாலியோ ஜிம்கானா இன்று வெளியாகி உள்ளது. போலீஸ்காரனை கட்டிக்கிட்டா என்ற டபுள் மீனிங் பாடலால் சர்ச்சையான இப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

கதை கரு

மடோனா செபாஸ்டியன் தன்னுடைய குடும்பத்தினருடன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அப்போது அரசியல்வாதி ஒருவரிடம் இருந்து பெரிய ஆர்டர் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் பிரச்சனை செய்கின்றனர்.

இதனால் பாதிக்கப்படும் அந்த குடும்பம் தாத்தாவின் அறிவுரைப்படி வழக்கறிஞரான பிரபுதேவாவை பார்க்க செல்கின்றனர். அவர்கள் செல்லும் நேரத்தில் அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இதனால் பதறிப் போகும் குடும்பம் தாங்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என பிணத்தை அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் ஜெயித்தார்களா?பிரபுதேவாவை கொன்றது யார்? என ட்விஸ்ட் வைக்கிறது இப்படம்.

நிறை குறைகள்

சக்தி சிதம்பரம் படங்கள் எல்லாமே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. அதே போல் தான் இப்படத்திலும் பிணத்தை வைத்துக்கொண்டு மடோனா செபாஸ்டியன் குடும்பம் படும் பாட்டை இயக்குனர் ஜாலியாக சொல்லி இருக்கிறார்.

பிரபுதேவாவும் பிணமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் காமெடி வொர்க் அவுட் ஆனதா என்று கேட்டால் அது சந்தேகம்தான். படத்தில் யோகி பாபு இருந்தும் கூட நகைச்சுவைக்கு பஞ்சமாக இருக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களும் காமெடி செய்ய முயற்சித்தாலும் அபிராமியின் நடிப்பு ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. மேலும் அந்த டபுள் மீனிங் சர்ச்சை பாடல் ஆட்டம் போட வைக்கிறது. அதை தாண்டி படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருக்கிறது.

இருப்பினும் இயக்குனர் ஆரம்பத்திலேயே இதை பற்றி சொல்லிவிட்டதால் கேள்வி கேட்க முடியவில்லை. ஆக மொத்தம் சில இடங்களில் கிரிஞ்சாக இருந்தாலும் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5

- Advertisement -

Trending News