நடிகர் பிரபு தனது பிறந்த நாளை ‘சார்லி சாப்ளின் 2’ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்பொழுது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்து வருகிறார். இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, பிரபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படப்பிடிப்பு தளத்தில் தான் பிரபு தனது பிறந்த நாளை பிரபு தேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.