Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல டிவி நிகழ்ச்சியில், சிவாஜியை அசிங்க படுத்தியதால் கொந்தளித்த பிரபு.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடுவர்!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் 8 சீசன்களை தாண்டி தற்போது ஒன்பதாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை வைத்து காமெடி செய்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகர், சிவாஜியின் வாய் அசைவு, கை அசைவுகள், உடல் பாவனை ஆகியவற்றை கிண்டல் அடித்திருந்தார் ஜெயச்சந்திரன் என்கின்ற காமெடி நடிகர்.
இந்த நிலையில் நடிகர் பிரபு இந்த நிகழ்ச்சியை கண்டித்து ஆவேசமாக பேசும் வீடியோ ஒனறு சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் இதன் பின்னணியில் ஒரு சம்பவம் நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது நடிகர் திலகம் என்ற கௌரவத்துடன், தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக வலம் வந்துகொண்டிருந்த பழம்பெரும் நடிகரை இந்த மாதிரி டிவி ஷோக்களில் பட வாய்ப்பு பெறுவதற்காக கேலி செய்வதை பார்த்த ரசிகர்கள் பலர் கொந்தளித்தனர்.
இந்த நிகழ்ச்சி பல சிவாஜி ரசிகர்களின் மனங்களை வேதனை படுத்தியதோடு மட்டுமல்லாமல், சிவாஜி குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்தியது.
இதனால் கொந்தளித்த சிவாஜியின் மகனும், அவருடைய அண்ணன் ராம்குமாரும் கொந்தளித்ததோடு தங்களுடைய கண்டனங்களை சம்பந்தப்பட்ட டிவி சேனலுக்கு தெரியப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ஆதவன் நடந்த சம்பவத்தில் தனக்கு பங்கு இருப்பதாக சொல்லி பிரபுவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sivaji
