Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரம்மாண்டமான பிரபாஸின் 20வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கலையே!

prabhas-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரம்மாண்டமான பிரபாஸின் 20வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கலையே!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படங்களின் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த இரண்டு படங்களின் வெற்றி அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது. விமர்சனம் செய்யும் அளவுக்கு மோசமான படமும் இல்ல அது.

பிரபாஸின் புகழை கெடுக்க பலர் செய்த சதிவேலை என்பது பின்னர் தெரியவந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி 400 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்த மிரட்டியது.

தற்போது பிரபாஸ் அடுத்ததாக தனது இருபதாவது படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு யுவி கிரியேஷன்ஸ் நான்கு மொழிகளில் தயாரிக்கும் பிரபாஸின் இருபதாவது படமான ராதே ஷ்யாம் எனும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

போஸ்டரை பார்க்கும்போது முழுக்க முழுக்க காதல் படம் போல் தெரிகிறது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கு சென்சேஷனல் ஹீரோயின் பூஜா ஹெக்தே நடிக்க உள்ளார்.

radhe-shyam-prabas20

radhe-shyam-prabas20

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top