fbpx
Connect with us

Cinemapettai

250 கோடி பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளராக வேண்டுமாம்.. ஒற்றைக்காலில் நிற்கும் பிரபாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

250 கோடி பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளராக வேண்டுமாம்.. ஒற்றைக்காலில் நிற்கும் பிரபாஸ்

பிரபாஸ் என்றாலே பிரம்மாண்டம் என ஆகிவிட்டது பாகுபலி படங்களுக்கு பிறகு. இவர் நடிக்கும் படம் என்றாலே ஐந்து மொழி படமாகத்தான் எடுக்கிறார்கள். பட்ஜெட்டும் தாறுமாறாக இருக்கிறது.

அடுத்ததாக பிரபாஸ் மற்றும் தெலுங்கு சென்சேஷனல் ஹீரோயின் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் படம் ராதே ஷ்யாம். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாக உள்ளது இந்த படம்.

ஆனால் வெறும் காதல் கதைக்கு சுமார் 250 கோடி செலவு பண்ணுகிறார்கள் என்றால் தான் ஆச்சரியமாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது.

இந்த படத்தை சாஹோ படத்தை தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் மீண்டும் தயாரிக்க உள்ளது. பாகுபலி படத்தை விட பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான சாஹோ படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

அதிரடி நாயகனாக வலம் வந்து போரடித்து விட்டதால் பிரபாஸ் அடுத்ததாக காதல் மன்னனாக வலம் வர உள்ளார். ஆனால் சமீபத்தில் வெளியான பஸ்ட் லுக் போஸ்டரில் இசையமைப்பாளர் பெயர் இடம்பெறவில்லை.

அதற்கு காரணம் பிரபாஸ் ஏ ஆர் ரகுமான் தான் இந்த படத்திற்கு இசை அமைக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம். வேறு யார் இசை அமைத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்றும் அளவுக்கு வம்பு செய்கிறாராம்.

அதே நேரத்தில் ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே பல படங்களில் பிஸியாக உள்ளதால் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

Continue Reading
To Top