fbpx
Connect with us

Cinemapettai

அடுத்தடுத்து 3 படங்களில் 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் பிரபாஸ்.. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 3 படங்களில் 1000 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் பிரபாஸ்.. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்!

பாகுபலி படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் உலக அளவில் ஏறிவிட்டது. படத்திற்கு படம் அவரது படத்தின் பட்ஜெட்டும் அதற்கு ஏற்றபடி பிரம்மாண்டமாக அமைந்து வருகிறது.

வெறும் 250 கோடி செலவில் பாகுபலி படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்ததில் இருந்து பிரபாஸ் மீது அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது.

பிரபாசை நம்பி எத்தனை கோடி வேண்டுமானாலும் பட்ஜெட் போடலாம் என தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கின்றனர். சமீபத்தில் வந்த சாஹோ படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.

பிரபாஸ் அடுத்ததாக முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்க இருக்கும் ராதே ஷ்யாம் படத்திற்கு 250 கோடி பட்ஜெட், பிரபாஸ் 20 படத்திற்கு 400 கோடி பட்ஜெட், அடிப்ரூஸ் என்ற 3டி படத்திற்காக 500 கோடி பட்ஜெட் என கெத்து காட்டுகிறார்.

கிட்டத்தட்ட பிரபாஸின் படங்களின் பட்ஜெட் மட்டுமே ஆயிரம் கோடிகளுக்கு மேல் உள்ளது. இது இந்திய அளவில் எந்த ஒரு நடிகருக்கும் அமையாத ஒரு வரம் என தெலுங்கு வட்டாரங்களில் பெருமையாகப் பார்க்கின்றனர்.

உண்மையான நிலவரம் என்ன என்பதை சாஹோ பட தயாரிப்பாளரை கேட்டால் கதை கதையாகச் சொல்வார். சரி காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னாங்க.

இதில் ஒவ்வொரு படத்திற்கும் பட்ஜெட்டுக்கு தகுந்த படி நூறு கோடிகளுக்கு மேல் தான் பிரபாஸுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top