பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ.

பாலிவுட் டாப் நாயகி ஸ்ரத்தா கபூர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் தொடங்கியுள்ளது.

இப்படத்தில் வரும் சண்டை காட்சிகளை ஹாலிவுட் பிரபலம் கென்னிபேட்ஸ் தான் அமைக்கிறாராம். படத்தில் பிரபாஸுடன் சேர்ந்து ஸ்ரத்தா கபூரும் சில அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காக மட்டும் படக்குழு ரூ. 25 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.