அனுஷ்காவின் திருமணம் தள்ளிப் போக நடிகர் பிரபாஸ் காரணம் என்று கூறப்படுகிறது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக பிரபாஸ் 5 ஆண்டுகளை ஒதுக்கினார். இந்த 5 ஆண்டுகளும் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் பாகுபலிக்காக தனது திருமணத்தையும் தள்ளிப் போட்டார்.

அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து அறிந்த பிரபாஸ் அனுஷ்காவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் முழு கவனம் செலுத்துங்கள் என்று பிரபாஸ் அனுஷ்காவிடம் தெரிவித்தாராம். இதையடுத்து தான் அனுஷ்கா தனது திருமணத்தை தள்ளிப் போட்டாராம்.

பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்தபோது 6 ஆயிரம் பெண்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாஸை அணுகினார்கள். ஆனால் அவரோ யாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக பேசப்படுகிறது. பாகுபலி படத்தில் சேர்ந்து நடித்தபோது காதல் ஏற்பட்டதாம். ஆனால் இதை கேட்டால் அனுஷ்கா சிரிக்கிறார், பிரபாஸ் நழுவுகிறார்.