அதிரடி சரவெடி கொண்டாட்டம் சாஹோ திரைவிமர்சனம்

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உலகெமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது பிரபாஸின் சாஹோ. 2 வருட உழைப்புக்கு பின் வெளியாகியுள்ள இப்படம் ஜெயிக்குமா இல்லையா என வாங்க பார்ப்போம்.

கதை தாதாக்களின் உலகம் வாஜி சிட்டி. சாம்ராஜ்யத்தின் அரசனின் மரணம் என ஆரம்பிக்கிறது படம் ஒருபுறம். மறுபுறம் மும்பையில் தொடர் திருட்டு, திணறும் போலீஸ், ஆபத்பாந்தவனாக வருகிறார் பிரபாஸ். போட்டோ பார்த்தே ஷ்ரத்தா கபூர் மீது காதல் வயப்படுகிறார். நடக்கிறது இன்வெஸ்டிகேஷன், தொடர்கிறது ரொமான்ஸ். புதிய தாதா சாம்ராஜ்யத்தை பிடிக்க நடிக்கிறது போட்டி. வாரிசு மகனாக அருண் விஜய், பல வருடங்களாக சிம்மாசனத்தை பிடிக்க துடிக்கும் சன்கி பாண்டே. நீல் நிதின் முகேஷ் – பிரபாஸ் இருவரின் ஒரிஜினல் முகம் தெரிவதுடன் வருகிறது இடைவேளை.

இரண்டாம் பாதியில் இடியாப்பத்தை விட கதை மற்றும் திரைக்கதையில் பல ட்விஸ்டுகள். அதிரடி சாகச ஆக்ஷன் காட்சிகள், இடையே காதல் தோல்வி, கிரிமினல் உலகில் துரோகம் என பல பரிணாமங்கள் நடக்கிறது. உச்சகட்டமாக கிளைமாக்சில் பிரபாஸ் தாண்டா ராஜா, எல்லாம் அவன் செயல் என முடிகிறது படம்.

பிளஸ் – இசை, ஆக்ஷன் காட்சிகள்

மைனஸ் – வழ வழ காதல் காட்சிகள், நோ லாஜிக் ஒன்லி மாஜிக்

சினிமாபேட்டை அலசல் – ஆக்ஷன் படம் எடுப்பது ஒருவகை, ஆக்ஷனை மட்டுமே படமாக எடுத்துள்ள இது புது வகை. பிரம்மாண்டமாக படம் எடுப்பார் இயக்குனர் என நினைத்து நாம் சென்றால், பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பியுள்ளார். ஆகமொத்தத்தில் இது மாஸ் மசாலா ஜானரில் ஒரு தெலுங்கு படத்தின் டப்பிங் என சென்றால் உட்கார்ந்து பார்க்க இயலும். அதைவிட்டு விட்டு ஹாலிவுட்டுக்கு நிகர், பாகுபலிக்கு போட்டி என்ற சிந்தனையுடன் சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

சாஹோ – சாகச சர்க்கஸ்

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.25 / 5

Leave a Comment