Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் முடிவால் மீண்டும் அனுஷ்காவிடம் தஞ்சம் அடைந்தார் பிரபாஸ்..!
ஹைதராபாத்: சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். பாகுபலி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை இந்த படத்திற்காக குறைக்கிறார்.
படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் துவங்க உள்ளது.
அனுஷ்கா
ஏற்கனவே பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்களில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் சாஹோ படத்திலும் அனுஷ்காவையே பிரபாஸுக்கு ஜோடியாக போட இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.
பிரபாஸ்
பிரபாஸுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்று அனுஷ்கா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாஸுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
ஷ்ரத்தா
பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க விரும்பினார் இயக்குனர். அதனால் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் கேட்க அவரோ ரூ. 8 கோடி சம்பளம் கேட்டு இயக்குனருக்கு ஷாக் கொடுத்தார்.
திஷா
பாலிவுட்டில் பெரிதாக மார்க்கெட் இல்லாத திஷா பதானியோ சாஹோ குழுவை பார்க்கவே மறுத்துவிட்டார். பின்னர் என்னவென்றால் ரூ. 5 கோடி சம்பளம் கேட்டு ஆள் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
