மும்பை: பாலிவுட் படத்தில் நடிக்க அழைத்த பிரபல இயக்குனர் கரண் ஜோஹாருக்கு நோ சொல்லியுள்ளார் பிரபாஸ்.

பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பின் இணை தயாரிப்பாளர் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார். அவருக்கு பிரபாஸை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்ல ஆசை.

பாகுபலி 2 படம் முடியட்டும் என்று பொறுமையாக காத்திருந்தார் கரண்.

கரண் ஜோஹார்

பிரபாஸ் நீங்கள் நேரடி பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கரண் ஜோஹார் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாஸோ கரணின் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

பிரபாஸ்

பாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸுக்கும் ஆசை உள்ளது. ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்ட தெலுங்கு படமான சாஹோவில் நடித்து முடித்த பிறகு பிற வாய்ப்புகளை ஏற்கலாம் என்று நினைக்கிறார்.

கான்கள்

இத்தனை ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீஸ் கிங்குகளாக கான்கள் இருந்தனர். ஆனால் பாகுபலி 2 படம் மூலம் கான்களை தூக்கி சாப்பிட்டுவிட்டு புதிய வசூல் மன்னனாகிவிட்டார் பிரபாஸ்.

மார்க்கெட்

தற்போது கான்களுக்கு நிகரான மார்க்கெட் பாலிவுட்டில் பிரபாஸுக்கும் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ள இந்தி இயக்குனர்கள் போட்டோ போட்டி போடுகிறார்கள்.