இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி வெளியாகி இன்று வரை ரூ.700 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் பிரபாஸ் 5 வருடங்களாக பாகுபலி படத்திற்காக கடின உழைப்பு, கூடுதல்  பயிற்சி என தீவிரம் காட்டினார். கடந்த 5 ஆண்டுகளில் பாகுபலி படத்தில் மட்டுமே நடித்தார்.

ஆனால் சக நடிகர்கள் பிற மொழி படங்களில் நடித்து வந்தனர். அந்த சமயத்தில் பணகஷ்டத்தில் பிரபாஸ் இருந்தார். அப்போது பிரபல தொழில் அதிபர்கள் மகள் முதல் தயாரிப்பாளர் மகள் வரை பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்த சமயத்தில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்.. என ஒரு பெண் இல்லை… இரண்டு பெண்கள் இல்லை.. சுமார் 6 ஆயிரத்து 23 பெண்கள் பிரபாஸை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் பாகுபலி படத்தில் நடித்து வந்ததால் பிரபாஸ் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை, தற்போது பிரபாஸ் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முன் வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் சென்னையில் ஒரு பெண்ணை தேர்வு செய்துள்ளதாகவும், ஆனால் பிரபாஸுக்கு பிடிக்கவில்லையாம்,  மீண்டும் பெற்றோர்கள் பெண் பார்க்க தொடங்கிவிட்டனர். விரைவில் யார் அந்த பெண் என்பது தெரிந்து விடும்… அப்ப மறுபடியும் பெண்கள் பிரபாஸை திருமணத்திற்கு  விண்ணப்பிக்க உள்ளனர் அப்படி தானே….