படப்பிடிப்பு தளத்தை விட்டுக் கொடுத்த பிரபல நடிகர்.. படக்குழுவினருக்கு குவியும் பாராட்டு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசு ஒரு பக்கம் முயற்சி எடுத்து வந்தாலும் மற்றொரு பக்கம் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

ஒருபக்கம் மருத்துவமனைகளில் படுக்கை அறை இல்லாமல் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தெலுங்கில் பிரபல நடிகரான பிரபாஸ் நடித்துவரும் ராதே ஷ்யாம் படத்திற்காக மிகப்பெரிய செட் ஒன்று போட்டுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழு தவித்து வந்தனர். தற்போது மக்களுக்கு உதவும் வகையில் படக்குழு உதவி செய்துள்ள சம்பவம் தான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

radhe shyam
radhe shyam

மிகப்பெரிய பொருட் செலவில் போடப்பட்ட படத்தின் செட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு படுக்கையறை இல்லாமல் தவித்து வரும், மக்களுக்கு உதவும் வகையில் கொரோனா வார்டு அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். தற்போது இப்படக்குழுவினருக்கு தொடர்ந்து பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

அது மட்டுமில்லாமல் சினிமா துறையில் இருக்கும் பலர் நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த பணம் உதவிகளை செய்து மக்களுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகர்கள் பலரும் கொரோனா தொற்று விழிப்புணர்வாக பேசி வீடியோவை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News