Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara-keerthysuresh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படி தாண்டா பத்தினியா.? இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. பிரபாஸின் நயன்தாரா பட வாய்ப்பை தட்டிப்பறித்த கீர்த்தி சுரேஷ்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்தவர் பிரபாஸ். இவர் படத்தின் அறிவிப்பு வெளிவந்தலே எதிர்பார்ப்புகள் உலக அளவில் இருக்கும், இந்தியர்களுக்கு விருந்தாக அமையும்.

இந்த நிலையில் பிரம்மாண்ட வரலாற்றுப் படத்தில், அதுவும் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பிரபாஸின் 22வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிகம் சம்பளமாக 100  கோடிக்கு மேல் பேசப்பட்டுள்ளது.

பிரபாஸ் ராமர் என்றாள் சீதை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் கேட்க தொடங்கிவிட்டனர், இந்த நிலையில் படக்குழுவினர் கீர்த்தி சுரேஷை சீதை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, ஓம் ராவத் இயக்கத்தில் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட உள்ளது.  மிக பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தி மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.

ஆனால் ராமராஜ்யம் என்ற படத்தில் நயன்தாரா சீதை கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். நயன்தாராவிடம் இந்த கதாபத்திரம் பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது, ஆனாலும் கூட கீர்த்தி சுரேஷ் நயன்தாராவின் வாய்ப்பை தட்டி பறித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் சாவித்திரியின் வரலாற்று படமான ‘நடிகையர் திலகம்‘ படத்தில் நடித்து தேசிய விருதைத் பெற்றதால் கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாம். படக்குழுவினர் இன்னும் சில கதாபாத்திரங்களை உறுதி செய்ய உள்ளனர், விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top