பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. பாகுபலி வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் வியாபார ரீதியிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

இந்த படத்தில் வில்லனாக நடிக்க தேடுதல் வேட்டை நடத்தியதில் கத்தி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த நீல்நிதின் முகேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தியிலும் இந்த படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீல்நிதின் சேர்க்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது

பாகுபலியை போல் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க வேண்டும் என்றால் படம் நன்றாக இருந்தால் மட்டுமே முடியும் நடிகர் நடிகைகள் முக்கியமில்லை என்பதை தெரிந்து கொண்டால் சரி.