fbpx
Connect with us

Cinemapettai

பிரபாஸின் 300 கோடி படத்தின் மூலம் 13 வருடங்களுக்கு பிறகு தென்னிந்தியாவுக்கு வரும் நடிகை.. இத்தனை கோடி சம்பளமா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபாஸின் 300 கோடி படத்தின் மூலம் 13 வருடங்களுக்கு பிறகு தென்னிந்தியாவுக்கு வரும் நடிகை.. இத்தனை கோடி சம்பளமா!

தென்னிந்திய சினிமாவில் தற்போது தொடர்ந்து அதிக பட்ஜெட் படங்களில் நடிக்கும் பிரமாண்ட நாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபாஸ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் 250 கோடி பட்ஜெட்டில் ஒரு காதல் படம் உருவாக உள்ளது சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஒரு காதல் படத்திற்கு இவ்வளவு பிரம்மாண்ட செலவில் என பலரும் மூக்கின் மேல் விரலை வைத்துள்ளனர்.

ராதே ஷ்யாம் என அழைக்கப்படும் அந்த படத்தில் முதல் முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு 300 கோடி பட்ஜெட் படத்தில் களமிறங்க உள்ளார் பிரபாஸ்.

கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் தீபிகா படுகோனே. 2007 ஆம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் எனும் படத்தின் மூலம் இந்திக்கு சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தென்னிந்திய மொழியில் நடிக்க வருகிறார் தீபிகா படுகோனே. இடையில் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் அனிமேஷன் காட்சிகளில் நடித்தார். ஆனால் நேரடியாக நடிக்கப்போவது இந்த படத்தின் மூலம்தான்.

இந்த படத்திற்காக தீபிகா படுகோனே சுமார் 12 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top