பிரபாஸ் பாகுபலி மூலம் இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்து சஹோ படம் உருவாகவுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது, இப்படமும் ரூ 150 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அவரும் எப்படியும் ஓகே சொல்லிவிடுவார் என படக்குழு தரப்பில் கூறப்படுகின்றது. மேலும், படத்தின் டெக்னிக்கல் டீம் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் வெளியிடப்படுமாம்.