Prabhasகருணாகரன் இயக்கத்தில் பிரபாஸ், காஜல் அகர்வால், பிரபு நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தெலுங்கு படம் டார்லிங். இப்படம் விரைவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

பாகுபலி புகழ் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருப்பதால் இப்படத்துக்கு ‘பிரபாஸ்: பாகுபலி’ என்றே பெயர் வைத்துள்ளனர். பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இப்படத்துக்கு இசை.