மும்பை: பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா கபூர் ரூ. 8 கோடி கேட்டதும் சாஹோ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார்களாம்.

பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1, 400 கோடி வசூல் செய்துள்ளது. தினம் தினம் பாகுபலி 2 படம் புதிய சாதனைகள் படைத்து வருகிறது.

பாகுபலிக்காக பிற படங்களில் நடிக்காமல் இருந்த பிரபாஸ் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். தற்போது அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் பிரபாஸ் நாடு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்குகிறது.

 

சாஹா இயக்குனரும், தயாரிப்பாளரும் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் வீட்டிற்கு சென்று கதை சொல்லியுள்ளனர். கதையை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார் ஷ்ரத்தா.

 

கதை சூப்பர் சார், நான் நடிக்கிறேன். ஆனால் சம்பளம் ரூ. 8 கோடி கொடுத்தால் போதும் என்று ஷ்ரத்தா கூறியுள்ளார். அடுத்த நொடியே இயக்குனரும், தயாரிப்பாளரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி வந்துவிட்டார்களாம்.

 

தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கே ரூ. 8 கோடி கொடுப்பது இல்லை. இந்நிலையில் இந்த அம்மா ரூ. 8 கோடி கேட்கிறது என்று விஷயம் தெரிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு ஷ்ரத்தா இருந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டார்களாம்.

 

டோணி படம் மூலம் பிரபலமான திஷா பதானி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர். அவரிடம் கேட்டதற்கு ரூ. 5 கோடி கேட்டாராம். பாலிவுட்டிலேயே திஷாவுக்கு யாரும் ரூ. 5 கோடி தர மாட்டார்கள். அப்படி இருக்கும் போது தெலுங்கில் தரணுமா என்று சாஹோ குழு நடையை கட்டிவிட்டதாம்.